உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் நாடுகளுக்கு உதவ வேண்டும்: ஜோ பைடன்

உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

‘ஜி-20’ மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளுக்கு உதவுவதற்காக ஜி-20 நாடுகளின் ஆதரவுக்கு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்துகிறார். உலக வங்கியின் நிதிநிலைமையை ஒருமுறை உயர்த்தும் வகையில், ஜி-20 நாடுகள் அதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். அது, உலக வங்கியின் வருடாந்திர சலுகை அல்லாத கடன் தொகை அளவின் 3 மடங்குக்கு இணையாக இருக்க வேண்டும். இந்த முயற்சி, உலக வங்கியை வலுவான அமைப்பாக மாற்றும். மேலும் ஏழை நாடுகளின் அவசர தேவைகளுக்கு உதவ முடியும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.