ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.300 கோடியை தவறாக கையாண்டு ஊழல் செய்ததாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து அவரை அண்மையில் கைது செய்தது. இதையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு நாள்கள் விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் (செப். 24) முடிவடைகிறது.
ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் வைத்து சந்திரபாபு நாயுடுவிடம் 12 பேர் கொண்ட சிஐடி அதிகாரிகள் (குற்ற புலனாய்வுத் துறை) குழு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.