95 ஆயிரம் வணிகர்களுக்கு 50000 ரூபாய்க்கு கீழுள்ள நிலுவை வரி தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மறைந்த முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் சமாதானம் என்னும் புதிய திட்டத்திற்கான சட்டம் உன் வடிவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி இன்று தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றினார். அப்போது பேசியதாவது:-
சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில் பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் வராமல் உள்ளது, நிலுவையில் உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன் வைத்தனர். அதற்காக புதிய வடிவத்தில் சமாதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு வணிகவரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை செலுத்துவதில் சலுகை வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 95 ஆயிரம் வணிகர்களுக்கு 5000 ரூபாய்க்கு கீழுள்ள நிலுவை வரி தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி ரூ.50 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயனடைவார்கள். வணிகர்கள், வணிகவரித்துறை இடையேயான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த சமாதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
