தந்தை பெரியார் தலைமையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா 28-ந்தேதி (நாளை) அன்று சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் தலைமையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த போராட்டத்தின் வெற்றிக்கு பிறகே 1936-ம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆலய பிரவேச பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
பெரியாரின் புரட்சி சிந்தனைகள், மன உறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் நினைத்து பார்க்க வேண்டும். டிசம்பர் 28-ந்தேதி காங்கிரஸ் மகாசபையின் தொடக்க நாள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் வைக்கம் போராட்ட நாள் சென்னையில் கொண்டாடப்படும் அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் பேரணி நாக்பூரில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.