வடகொரியாவில் ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வடகொரியாவில் ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனை தடுக்க ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தின. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி வடகொரியாவும் தனது நாட்டின் எல்லைகளை கடந்த 2020-ம் ஆண்டு மூடியது. இதனால் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வடகொரியாவும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்தது. அதன்படி தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு முதன்முதலில் அனுமதி வழங்கப்படுவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.