கொரோனாவை விட கொடூரமான ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:-
உலக சுகாதார நிறுவனம் தற்போது தொற்றுநோய் தடுப்புக்கான நிதி திட்டத்தை தொடங்கி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்நாட்டு தடுப்பூசி தயாரிக்க நிதியுதவி வழங்கி உள்ளது. தற்போது ‘டிசீஸ் எக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள வைரஸ் நோய் பரவி வருகிறது. ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற புதிய வகை வைரஸ் நோயானது எங்கு பரவும், என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. கொரோனாவை விட கொடூரமானது. இந்த நோயை எதிர்கொள்ள உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் முறையாக ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற வார்த்தையை உலக சுகாதார நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்து சுகாதார நிபுணர்களும் ‘டிசீஸ் எக்ஸ்’ குறித்து எச்சரித்தனர். லண்டனின் கழிவுநீர், குரங்கு, பறவைக் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், போலியோ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சூழலில் ‘டிசீஸ் எக்ஸ்’ குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.