பேடிஎம் தலைவர் பதவியிலிருந்து விலகினார் விஜய் சர்மா!

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விஜய் சர்மா விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 29 முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அந்நிய முதலீடுகள் தொடா்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்காததையடுத்து, அந்த வங்கி பிப்ரவரி 29-ஆம் தேதிக்குப் பிறகு வாடிக்கையாளா்களிடம் இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தடைவித்திருந்தது.

வாடிக்கையாளா்களிடமிருந்து டெபாசிட் தொகை பெறக் கூடாது, கணக்குகளில் புதிய தொகை வரவு வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட உத்தரவை ரிசா்வ் வங்கி கடந்த ஜன.31-ல் பிறப்பித்தது. எனினும், கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை தடை நீட்டிக்கப்பட்டது. பேடிஎம் நிறுவனத்தின் மீது ஏற்கெனவே சட்ட விரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.