சீனா இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது பிரதமர் மோடி தூங்கிவிட்டார்: மல்லிகார்ஜுன கார்கே!

சீனா இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது பிரதமர் நரேந்திர மோடி தூங்கிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானின் சித்தோர்கரில் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். மோடியை பொய்யர்களின் சர்தார் என்றும், மோடி நாட்டுக்காக சிந்திக்கவில்லை, காந்தி குடும்பத்தை விமர்சிப்பதே அவருக்கு வேலை என்றார்.

தான் யாருக்கும் பயப்படமாட்டேன் என்று மோடி சொல்கிறார். உங்களுக்குப் பயம் இல்லை என்றால் ஏன் நிலத்தின் பெரும் பகுதியை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தீர்கள். அவர்கள் நிலத்தை அபகரிக்கும்போது நீங்கள் உறங்கிக்கொண்டிருந்தீர்களா, தூக்க மாத்திரை சாப்பிட்டீர்களா?

பிரதமர் மோடி நாட்டு மக்களை சித்தரவதை செய்து தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். அவர் எப்போதும் பொய் உறைக்கிறார். காந்தியின் வம்ச அரசியலைப் பற்றிப் பேசுகிறார். பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார், மக்களவை தேர்தலின் போது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். ஆனால் கலவரங்களைக் கண்ட மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.