போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம்!

காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் படைகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க, துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இஸ்ரேல் – காசா இடையே அமைதி ஏற்பட எகிப்து, கட்டார் நாட்டு அரசுகள் சமரசம் செய்து வந்தன. இந்த நிலையில், இரு நாடுகளின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வதாக ஹமாஸ் அமைப்பின் தலைவர் கடிதம் எழுதி உள்ளார்.

காசா மக்களின் கடைசி புகலிடமாக இருக்கும் கிழக்கு ரபா மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இதனை அடுத்தே போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த முடிவை வரவேற்று அங்குள்ள மக்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் போர் நிறுத்தம் ஒப்பந்தம் முழுமையான விவரங்களை வெளியிடவில்லை. இதனிடையே போர் நிறுத்த முடிவுகளை ஏற்று பணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் அரசு ஈடுபட வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பணைய கைதிகளின் உறவினர்களும் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.