வடகொரியாவிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வடகொரியாவில் வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட 5,000க்கும் மேற்பட்டோர் விமானம் மூலம் மீட்கப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகம் திங்கள்கிழமை தெரிவித்தது. அங்கே இதுவரை வெள்ளம் காரணமாக 100 பேர் வரை பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. 200க்கும் அதிகமானோர் இதனால் காணாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளன.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இதற்கான இராணுவ மீட்பு நடவடிக்கையை தனிப்பட்ட முறையில் வழிநடத்தி வியப்பை ஏற்படுத்தி உள்ளது. நேரடியாக வெள்ளத்திற்கு இடையே களத்திற்கே சென்று அவர் மீட்பு பணிகளை மேற்கொண்டு உள்ளார். அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) இதற்கான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது. அங்கே சனிக்கிழமையன்று பெய்த கனமழையால் நாட்டின் வடமேற்கு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வட கொரிய-சீன எல்லையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவே அங்கே ராணுவம் நேரடியாக சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில்தான் கிம் ஜோங் உன் நேரடியாக களமிறங்கி மீட்பு பணிகளை செய்து வருகிறார். கிம் மேற்பார்வையிட்ட மீட்பு நடவடிக்கையில், சுமார் 10 இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படை மற்றும் அரசு படகுகள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு நாட்டின் அதிபராக அவர் நேரடியாக களத்திற்கே வந்து மீட்பு பணிகளை செய்தது வரவேற்பை பெற்றுள்ளது.
அங்கே பேரிடர் தடுப்பு முயற்சிகள் முறையாக நடக்கவில்லை என்று நேரில் பார்வையிட்ட கிம் விமர்சித்தார்: சினுய்ஜு மற்றும் உய்ஜு நகரங்களில் இன்னும் பணிகள் சரியாக நடக்கவில்லை என்று விமர்சனம் வைத்தார். அங்கே மோசமான வானிலையால் மக்களை வெளியேற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாக கிம் ஜோங் உன் மோசமான தலைவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் விமர்சனம் வைக்கப்படும் நிலையில் அதை எல்லாம் கிம் ஜோங் உன் உடைத்து போட்டுள்ளார். தன் மீதான பிம்பத்தை கிம் ஜோங் உன் உடைத்து இருக்கிறார்.