ஜப்பானில் அடுத்தடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 7.1 ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியாஷூ பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று அங்குள்ள நேரப்படி மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
