எங்களை சீண்டினால் அணுகுண்டுகளை வீசுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சவால் விடுத்துள்ளார்.
வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், தலைநகர் பியோங்யாங்கின் மேற்கில் அமைந்துள்ள சிறப்புப் படைகளின் ராணுவப் பயிற்சித் தளத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘தென் கொரியா மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்காவால் வடகொரியா தாக்கப்பட்டால், அணு ஆயுதங்களை எவ்வித தயக்கமின்றி எங்களது ராணுவம் பயன்படுத்தும்’ என்றார்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் தென் கொரியா அதிபர் யூன் சுக் யோல் அளித்த பேட்டியில், ‘எங்கள் மீது வடகொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அது வட கொரியா ஆட்சியின் முடிவு காலமாக இருக்கும். எங்களது ராணுவமும், அமெரிக்கா கூட்டுப்படைகளும் இணைந்து சரியான பதிலடி கொடுக்கும். அந்த நாள் வட கொரிய ஆட்சியின் முடிவுநாளாகும்’ என்றார்.