சீனாவில் தாறுமாறாகச் சென்ற கார் மோதியதில் 35 பேர் பலி!

சீனாவின் சுஹாய் மாகாணத்தில் நேரிட்ட பயங்கர விபத்தில், தாறுமாறாகச் சென்ற கார், விளையாட்டு மையத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 35 பேர் பலியாகினர். 43 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் ஒரு விபத்தா அல்லது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக 62 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்குக் காரணம் என்ன, கைது செய்யப்பட்ட நபரின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீன நாட்டின், பாதுகாப்புக் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் பயிற்சியின்போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதையடுத்து, முக்கிய நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்பதையும், சீன அரசு பல கொள்கை முடிவுகள் இது தொடர்பாக எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.