அமெரிக்காவில் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் போல் ரஷ்யாவின் காஸன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடந்துவரும் நிலையில் இரு நாடுகளும் சமீப காலமாக டிரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக உக்ரைனுக்கு அமெரிக்கா 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதம் தாங்கிய அதிநவீன டிரோன்களை வழங்கி உள்ளது. இந்த ஆயுதங்களை உக்ரைன் முழு வீச்சில் பயன்படுத்த தொடங்கி உள்ளது.
ரஷ்யாவின் காஸன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. குடியிருப்பு கட்டிடத்தை உக்ரைன் டிரோன் தாக்கி அழித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு ரஷ்யாவில் அமைந்துள்ள காஸன் பகுதி கசாங்கா நதியின் கரையில் அமைந்துள்ளது. வரலாற்று கட்டடங்கள் அமைந்துள்ள இந்த பகுதியில் உக்ரைன் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி டிரோன் தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.