ஜெர்மனியில் கார் மோதி காயமடைந்த 7 இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவி!

ஜெர்​மனி​யில் மருத்​துவர் ஒருவர் கிறிஸ்​துமஸ் சந்தை​யில் காரை மோதி நடத்திய தாக்​குதலில் இந்தி​யர்கள் 7 பேர் படுகாயம் அடைந்​துள்ளனர். அவர்​களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.

ஜெர்​மனி​யின் மேக்​டேபர்க் நகரில் கிறிஸ்​துமஸ் பண்டிகைக்​காக, மிகப்​பெரிய ஷாப்​பிங் மார்க்​கெட்​டில் கடந்த வெள்​ளிக்​கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்​தது. அப்போது ஒரு கார் அதிவேகமாக வந்து சாலையில் செல்​வோர் மீது மோதி​யபடி நிற்​காமல் சென்​றது. இதில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்​தனர். 60-க்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​தனர். அவர்​களில் பலருடைய நிலைமை கவலைக்​கிடமாக உள்ளது.
காரை தாறு​மாறாக ஓட்டி தாக்​குதல் நடத்​தி​ய​வர், சவுதி அரேபி​யாவை சேர்ந்த மனநல மருத்​துவர் தலேப் (50) என தெரிய வந்துள்ளது. அவரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வருகின்​றனர்.

இந்நிலை​யில் காரை மோதி நடத்திய தாக்​குதலில் இந்தி​யர்கள் 7 பேர் படுகாயம் அடைந்​துள்ளனர். அவர்​களில் 3 பேர் சிகிச்​சைக்​குப் பிறகு மருத்​துவ​மனை​யில் இருந்து டிஸ்​சார்ஜ் செய்​யப்​பட்​டனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்​சை​யில் உள்ளனர். காயம் அடைந்த இந்தி​யர்​களின் குடும்பத்​தினரை பெர்​லினில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்துவருகின்​றனர் என்று மத்திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் நேற்று தெரி​வித்​தது.

இதுகுறித்து வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்கை​யில், ‘‘ஜெர்​மனி​யில் நடத்​தப்​பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்​கிறோம். 5 பேரின் உயிர்கள் பறிக்​கப்​பட்​டுள்ளன. பலர் காயம் அடைந்துள்ளனர். பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்காக பிரார்த்தனை செய்​கிறோம். காயம் அடைந்த இந்தி​யர்​கள், அவர்​களது குடும்பத்​தினருக்கு வேண்டிய உதவிகள் செய்​யப்​படு​கின்​றன’’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்தத் தாக்​குதலுக்கு சவுதி அரேபிய அரசும் கண்டனம் தெரி​வித்​துள்ளது. ஜெர்மனி மக்கள் மற்றும் அரசுக்கு முழு ஆதரவு அளிப்​பதாக சவுதி தெரி​வித்​துள்ளது.