சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பிரேக் பிடிக்காததால் நடைமேடையில் மோதி விபத்து.

மாலை 4.25 மணிக்கு சென்னை கடற்கரை ரயில்நிலைய நடைமேடை- 01ல் ரயில் வந்துகொண்டிருந்தது. பீச் ஸ்டேஷன் பணிமனையிலிருந்து திரும்பிய ரயில் என்பதால் ஓட்டுநரை தவிர யாரும் இல்லை. நடைமேடைக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த நடைமேடையில் ஏறி கட்டிடத்தில் மோதியது.