அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் இதில் இருப்பதால், இதற்கு அகத்தி கீரை என்ற பெயர் வந்தாக கூறப்படுகிறது. வருடம் முழுவதும் சுலபமாக கிடைக்கக்கூடியது. மேலும் வெற்றிலைத் தோட்டத்திற்கு உறுதுணையாகவும், பொதுவாக வெற்றிலைத் தோட்டம் உள்ள பகுதியில் இந்த அகத்திக்கீரை ஏராளமாக கிடைக்கும். முற்றின கீரையை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது, அவை ஒவ்வொமை மற்றும் வயிற்று பிரச்சனையை ஏற்படுத்திவிடும், இளங்கீரையை எடுத்து சமையலுக்கு பயன்படுத்தவேண்டும்.
இதில் 50 கும் மேற்பட்ட சத்துகள் உள்ளது. இரண்டு வகையான அகத்தி கீரை, ஒன்று வெள்ளை நிற பூக்கள் கொண்டது, மற்றொன்று சிவப்பு நிற பூக்கள் கொண்டது. இந்த மரத்தின் அனைத்து பகுதிகளும் மூலிகை தன்மை உள்ளது. பெரும்பாலும் வெள்ளை நிற பூக்கள் கொண்ட அகத்தி கீரையை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்கீரை சற்று கசப்பாக இருக்குமென்பதால், மற்ற கீரையை போல் விலை போவதில்லை. இந்த கசப்பு தன்மை தெரியாமல் இருக்க சமைக்கும்போது, தேங்காப்பால் சேர்த்து சமைத்தால், ருசியாக இருக்கும். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களும், உயிர்ச்சத்துக்களும் பற்றி தெரிந்துகொண்டால், உடலின் பல்வேறு ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு இதற்கு உண்டு. புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்துதல், குட்கா, புகையிலை போன்ற பழக்கத்தில் உள்ளவர்கள், அடிக்கடி உணவில் சேர்த்துவர, இப்பழக்கத்திலிருந்து விடுபடலாம். இக்கீரையில் வாயு தன்மை இருப்பதால், சமைக்கும்போது பெருங்காயம் சேர்த்து கொள்வது, முற்றிலும் வாயுவை வெளியேற்றிவிடும்.
கால்சியம் சத்தும் அதிகம் இருப்பதால் முக்கியமாக பற்கள், மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இக்கீரையை சமைத்து உண்டபின், செரிமானம் மெதுவாக இருக்கும், எனவே குழந்தைகள், பெரியவர்கள் மத்திய உணவில் மட்டும் சேர்த்துக்கொள்வது நல்லது. வாரத்தில் 2 முறை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், முதிர்வயதிலும் எலும்பு உறுதியாக இருக்கும். ர
தேமல், மற்றும் சொரியாசிஸ் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இக்கீரையை மைய அரைத்து, தேமல், சொரியாசிஸ் உள்ள இடத்தில் தடவி வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய வாய்ப்புண்டு. பித்தம், உடல் சூடு, மூளை சம்பந்தமான பகுதியில் கோளாறு ஏற்படுவதால், அறிவு ஆற்றல் மற்றும் நியாபக குறைவு ஏற்படும். இவற்றை சரிசெய்ய அடிக்கடி உணவில் சாப்பிட்டுவந்தால், இப்பிரச்சனையிலிருந்து பூரண குணமடையலாம். அகத்தி கீரையின் பூக்களை கண்களில் வைத்து சிறு துணி வைத்து கட்டிக்கொண்டால், கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கி, நல்ல தெளிவான பார்வை கிடைக்கும்.