செயல்பாடு திறன் குறைவாக உள்ள 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான டுவிட்டர், முகநூலின் மெட்டா, அமேசான் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.
அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் இடம்பெறவுள்ளது. செயல்பாடு திறன் குறைவாக உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் புதிய செயல்திறன் மேலாண்மை திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் குறைவான செயல்திறன் உள்ள ஊழியர்களை கண்டறிந்து அவர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் செயல்திறன் குறைவாக உள்ள 6 சதவிகிதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளனர். இதன்மூலம், சுமார் 10,000 பேர் வேலையிழக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் பணிநீக்க நடவடிக்கையில் களமிறங்கியுள்ள நிலையில், தொழில்நுட்ப பணியில் உள்ளவர்கள் பீதியடைந்துள்ளனர்.