ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக நடத்தக்கூடாது: போப் பிரான்சிஸ்

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது என்று என்று போப் பிரான்சிஸ் கூறினார்.

போப் பிரான்சிஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

உலகின் சில நாடுகளில் உள்ள கத்தோலிக்க பிஷப்கள் ஓரின சேர்க்கையாளர்களை தண்டிக்கும் அல்லது துன்புறுத்தும் சட்டங்களை ஆதரிக்கின்றனர். இது போன்று செயல்கள் பாவம் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஓரின சேர்க்கையாளர்கள் உட்பட அனைவரின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் பிஷப்கள் தங்கள் மனநிலையை மாற்றி கொள்ள வேண்டியது அவசியம். கடவுள் அனைவரையும் தனது குழந்தையாகவே கருதுகிறார். எனவே, ஓரின சேர்க்கையில் ஈடுபடும் நபர்களை சர்ச்சுக்குள் வருவதை பிஷப்கள் வரவேற்க வேண்டும். அவர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது, பாரபட்சம் காட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.