அன்பான வாழ்த்து வெள்ளத்தில் மிதந்து மகிழ்ந்து வருகிறேன்: சூரி!

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விடுதலை’ படத்திற்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வெற்றி தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் சூரி. அதில் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் மிதந்து மகிழ்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வரவேற்பையும், பாராட்டுக்களையும் அள்ளி வருகிறது. இந்தப்படத்தின் மூலமும் தனது வெற்றி பார்மூலாவை தக்க வைத்துள்ள வெற்றிமாறனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நடிகர் சூரி ஹீரோவாக நடித்த முதல் படத்திலே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ‘விடுதலை’ பட வெற்றி தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார் சூரி. அதில் அவர் கூறியுள்ளதாவது:-

அனைவருக்கும் வணக்கம். மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. ‘விடுதலை’ முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொதுமக்கள், சமூக வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்து சென்ற பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம். இவ்வாறு தனது நன்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சூரி.