நடிகைகள் கொஞ்சம் எடை கூடினால் உருவக்கேலி செய்யப்படுகிறார்கள் என்று நடிகை ஹனி ரோஸ்
உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிங்கம் புலி, பட்டாம் பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ஹனி ரோஸ். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபலமான நாயகியாக திகழ்கிறார். இந்நிலையில் நடிகை ஹனி ரோஸ் உருவக்கேலி குறித்து உருக்கமாக பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய அவர், சினிமாவில் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி தான் ஆடைகள் இருக்கும். எந்த மாதிரியான உடைகள் அணிவது, எப்படி நடிப்பது என்பது அவரவரது விருப்பம். நடிகைகள் கொஞ்சம் எடை கூடினால் உருவக்கேலி செய்யப்படுகிறார்கள். சோஷியல் மீடியாக்களில் நெகட்டிவ்வாக பேசி நோகடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என உருக்கமாக பேசியுள்ளார்.
