பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பின் அவசர ஊர்திக் குழு காணாமல் போயிருப்பதாக அந்த அமைப்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆறு வயது சிறுமியை மீட்பதற்காக சென்ற அவசர ஊர்தியுடன் எந்த தகவல் தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை ஹின்ந் எனும் சிறுமி தனது இறந்துபோன பெற்றோருடன் கார் ஒன்றுக்குள் சிக்கியிருப்பதாக கிடைத்த தகவலினடிப்படையில், பாலஸ்தீன செஞ்சுலுவை அமைப்பின் பணியாளர்களான யூசுப் சைனோ மற்றும் அகமது அல் – மதோன் ஆகியோர் அவசர ஊர்தியில் விரைந்தனர். 66 மணிநேரத்திற்குப் பிறகும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என அந்த அமைப்பு வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், மருத்துவ மற்றும் மனிதநேய உதவிப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சர்வதேச அமைப்புகளின் தலையீடு அவசியம் என பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பு கூறியுள்ளது.