ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அதன் பிறகு உளி, சுத்தியலை எடுத்து மோடி தனது கையால் பொறித்த வாசகம் தான் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

முஸ்லிம் நாடுகளின் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் இந்துக்கள் ஆவர். இவர்களுக்காக அந்நாட்டு அரசாங்கம் பல நகரங்களில் இந்து கோயில்களை கட்டி இருக்கிறது. ஆனாலும் அந்நாட்டு தலைநகரான அபுதாபியில் இந்து கோயில் இல்லை என்ற குறை நீண்டகாலமாக இருந்து வந்தது. இந்த சூழலில் தான், அபுதாபியில் 27 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான இந்து கோயிலை அந்நாட்டு அரசாங்கம் கட்டியுள்ளது. அல் முரக்கா பகுதியில் பிஏபிஎஸ் அமைப்பின் சார்பில் ரூ.700 கோடி மதிப்பில் இந்த நாராயணன் சுவாமி கோயில் கட்டப்பட்டு இருக்கிறது. ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் இத்தாலியின் வெள்ளை மார்பிள் கல் ஆகியவற்றை கொண்டு இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அயோத்தி ராமர் கோயிலை போலவே இந்த கோயில் கட்டுமானத்திற்கும் ஒரு பொட்டு இரும்பை கூட பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தக் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் அங்கு பல பூஜைகளையும் மோடி மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, அந்தக் கோயிலின் வாசலில் உள்ள கல்வெட்டில் சுத்தியலையும், உளியையும் எடுத்து ‘Vasudhaiva kutumbakam’ (வசுதைவ குடும்பகம்) என்று பொறித்தார். வசுதவை குடும்பகம் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் உலகமே ஒரே குடும்பம் என்பது பொருள் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி இந்த வாசகத்தை பொறித்தது உலக தலைவர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இதையடுத்து ‘கத்தார்’ புறப்பட்டுச் சென்றார். அங்கு கத்தார் நாட்டு அதிபரை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு சமீபத்தில் கத்தாரில் நாட்டு அரசால் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 இந்தியர்கள் மத்திய அரசின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.