தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம் செய்ததை கட்டி அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனு கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகும். இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்து வருகிறது. மொத்தம் 1,403 பேர், 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நேற்றுவரை 43 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று அந்த வேட்பு மனுக்களின் பரிசீலனையின் போது, டிடிவி தினகரன் உள்பட 2 பேரின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரன் பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம் செய்ததை சுட்டி காட்டி அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் எதிர்ப்பு தெரிவித்ததால் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.