உலக நாயகன் கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாளையொட்டி வாழ்த்திய பிரபலங்கள்!

உலக நாயகன் கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாளையொட்டி திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் இன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தாநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞருமான கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நாடு போற்றும் சாதனைகளை அவர் படைக்க வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன். ஒரு இணையற்ற கலைஞனாக, எங்களை தொடர்ந்து நீங்கள் ஆச்சரியப்படுத்துறீர்கள். ஜனநாயகம் மற்றும் மதசார்பற்ற கொள்கையை சமரசமின்றி நீங்கள் கடைபிடிப்பது எங்களை ஊக்குவிக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாகவும், உடல்நலத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் மோகன் லால், மாபெரும் நடிகர் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னும் பல ஆண்டுகள் எங்களை ஊக்கப்படுத்தி ஆச்சரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர், இந்தியன் 2 படத்தின் போஸ்டரை பகிர்ந்து, ‘நீங்கள் எங்கள் பொக்கிஷம், பன்முகத் திறமை கொண்ட கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின், தன் அசாத்திய கலைத்திறனால், கடும் உழைப்பினால், தளராத நம்பிக்கையால் மக்களைக் கவரும் கலைஞானி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு, எனது இனிய நண்பரே, உங்கள் பிறந்தநாளில் உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நமது மரியாதையான அன்பான நட்பைக் நான் கொண்டாடுகிறேன். லவ் யூ சார் என்று கூறியுள்ளார்.