10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி: திருமாவளவன்

10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

சமூக நீதி என்ற கோட்பாட்டின் அடிப்படையை தகர்க்க வேண்டும் என்பதற்காக தான் EWS என்ற இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி இது. இந்த அநீதியை எதிர்த்து தீவிரமாக களமாட வேண்டிய பொறுப்பு ஓபிசி பிரிவினருக்கு உள்ளது. ஓபிசி என்ற பெரும்பான்மை இந்து சமூகத்துக்கு எதிராக பாஜக செயல்படுவதை உணர்த்துகிறது. எனவே 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். தீர்ப்பை எதிர்த்து 9 பேர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்ய வேண்டும். 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு 10 சதவீத இடஒதுக்கீட்டை தீர்மானிக்க முடியாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.