இந்தோனேசிய நாட்டில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, சுமார் 56 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசிய நாட்டில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஜப்பான் நாட்டிற்கு அடுத்த படியாக இந்தோனேசிய நாட்டில் தான் அதிக நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம், இந்தோனேசிய நாட்டின் ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகள், கட்டடங்கள், வணிக வளாகங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 40 பேர் பலியாகி உள்ளதாகவும், 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.