கூகுள் நிறுவனம் தனது 12,000 ஊழியா்களைப் பணிநீக்கம்!

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகம் முழுவதும் தனது 12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது.

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது 10,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்த மறுநாளே கூகுள் நிறுவனம் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிநீக்கம் தொடா்பாக ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை, ஊழியா்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளாா். பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கள் ஊழியா்களைப் பணியிலிருந்து நீக்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில் கூகுளும் இணைந்துள்ளது.

ஆல்பபெட்டின் இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவைச் சோ்ந்த எத்தனை போ் பாதிக்கப்படுவாா்கள் என்கிற விவரம் தெரியவரவில்லை. கடந்த 2022, செப்டம்பா் நிலவரப்படி இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியா்களின் எண்ணிக்கை 1.86 லட்சம். இவா்களில் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் சுமாா் 5,000 போ் என்பது குறிப்பிடத்தக்கது.