மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப். 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஒரே நபர் தன்னிடம் உள்ள பல மின்சார இணைப்பிற்கு ஒரே ஆதார் விவரங்களை பயன்படுத்த முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டு ஓனர்கள் ஆதார் விவரங்களை கொடுக்கலாம். வாடகையில் இருப்பவர்களும் ஆதார் விவரங்களை கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம். ஆனால் ஆதார் விவரங்கள் கொடுப்பதால், அந்த மின்சார கணக்கின் பெயர் மாறிவிடாது. அதாவது வாடகை வீட்டில் இருப்பவர் ஆதார் விவரங்களை கொடுத்தாலும், ஓனர் பெயர்தான் கணக்கின் பெயரில் இருக்கும். நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கை நீக்கிக்கொள்ளலாம். அதாவது நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கையும் நீக்க முடியும். புதிதாக அந்த வீட்டிற்கு வருபவர்கள் கணக்கை சேர்த்துக்கொள்ள முடியும். இதுதான் விதி. இதற்காக நேரடி முகாம்கள் நடந்து வருகின்றன.

ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், மின்சார கணக்கில் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறப்படுவது தவறு. ஆன்லைனில் கட்டணம் செலுத்த மட்டுமே ஆதார் விவரங்கள் தேவை. மற்றபடி நேரில் கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை இல்லை. மானியம் பெறும் பயனர்களை கண்டறிய ஆதார் விவரம் தேவை என்பதால், அதற்காக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்காக ஆன்லைனில் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் நேரில் முகாம் மூலமும் இணைக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த முகாம் கட்டணம் இன்றி இயங்கி வருகிறது. இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவதில் சிலருக்கு மட்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எளிதாக மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் ஆன்லைன் மூலம் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும். தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் இருக்கின்றனர். இதுவரை 2.25 கோடி பேர் மட்டுமே ஆதாரை இணைந்துள்ளனர். முன்னதாக இதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜனவரி 31 வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிய உள்ள நிலையில் ஆதார் இணைப்பு பணிகள் துரிதமாக நடந்து வந்தன.

இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. விவசாய இணைப்புகளில் 5 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வசதியாக வரும் பிப்ரவரி 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க யாரும் பணம் வாங்க கூடாது. அதிகாரிகள் யாரும் மக்களிடம் கட்டணம் வசூலிருக்க கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம், என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.