விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்கள் பற்களை இழந்து வீடு திரும்பினர். அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணையின் போது பற்களை குறடு உள்ளிட்ட ஆயுதங்களால் பிடுங்கி எறிந்து சித்ரவதை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அத்துடன் இது தொடர்பான விசாரணை அதிகாரியாக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த வாரம் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர் விசாரணையை முடித்துக் கொண்டு சென்னை கிளம்பினார்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ்க்கு எதிராக ஐபிஎசி செக்சன் 326 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் அவருடன் விசாரணை செய்த போலீசார் மீது விசாரணை கைதிகள் பற்களை அகற்றியதாகவும், இருவரின் விதைப்பைகளை நசுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் 40க்கும் மேற்பட்டோரின் பல்லை உடைத்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சார் ஆட்சியர் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். அதில் சூர்யா மட்டும் திடீரென பல்டி அடித்து போலீஸ் அதிகாரி தனது பல்லை உடைக்கவில்லை, கீழே விழுந்து தான் பல் உடைந்ததாக பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ்க்கு எதிராக ஐபிஎசி செக்சன் 326 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் அவருடன் விசாரணை செய்த போலீசார் மீது விசாரணை கைதிகள் பற்களை அகற்றியதாகவும், இருவரின் விதைப்பைகளை நசுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2-வது கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. நெல்லை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் இந்த விசாரணையை நேற்று காலை 10 மணியளவில் உயர்மட்ட அதிகாரி அமுதா தொடங்கினார். விசாரணைக்கு வருபவர்கள் போலீசாருக்கு எதிரான புகார்களையே முன் வைக்க வருவதால், தாலுகா அலுவலகத்தில் இருந்த அனைத்து காவல்துறையினரும் வெளியேறுமாறு வருவாய்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதானால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் வெளியேறிய பிறகே அதிகாரி அமுதா தனது விசாரணையை தொடங்கினார். பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 14 மணி நேரம் விசாரணை நீடித்தது. இதனால் நேற்று அம்பை தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. மீதம் உள்ள பாதிக்கப்பட்ட நபர்கள் 3 பேரிடம் ஐ.ஏ.எஸ் அதிகாரி இன்று விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவல் அதிகாரி பல்வீர் சிங் மீது நேற்று 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.