அமெரிக்க நிருபரின் கைதை உறுதி செய்தது ரஷ்ய நீதிமன்றம்!

ரஷ்யாவின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்கா பத்திரிகையாளரின் கைதை ரஷ்ய நீதிமன்றம் உறுதி செய்தது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அமெரிக்காவின் புகழ் பெற்ற வால்ஸ்ட்ரிட் ஜர்னல் பத்திரிகையின் அலுவலகம் ஒன்று உள்ளது. இங்கு நிருபராக பணியாற்றி வந்த இவான் கெர்ஷ்கோவிச், ரஷ்யாவின் யூரல் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள யெகாடெரின்பர்க்கில் செய்தி சேகரித்து கொண்டிருந்தபோது ரஷ்ய ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை சேகரிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிராக இவான் மாஸ்கோ நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவானின் கைதை உறுதி செய்து நேற்று தீர்ப்பு வழங்கியது.