பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் நேற்று நள்ளிரவு நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஒரு காவல் நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த சத்தத்தை அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 11 போலீஸார் அடங்குவர். அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண்ணும், அவரது 1 வயது குழந்தையும் இந்த குண்டுவெடிப்புக்கு பலியாகினர். 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும், பொதுமக்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அங்கு வந்த ராணுவத்தினர், அங்கு தீவிர சோதனை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், தீவிரவாதி ஒருவன் தனது உடலில் வெகுண்டை கட்டி வந்து காவல் நிலையத்தின் ஆயுதக் கிடங்கில் விழுந்து வெகுண்டை வெடிக்கச் செய்திருப்பது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத போதிலும், பாகிஸ்தான் தலிபான்களே (தெஹ்ரிக் இ- தாலிபான் பாகிஸ்தான்) இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.