சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை: பிரேமலதா

மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை. லஞ்சம், ஊழல், டாஸ்மாக் ஆகியவை மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை போரூர் வானகரம் சுங்க சாவடியை முற்றுகையிட்டு தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அதை ஏற்கக்கூடாது. மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை. லஞ்சம், ஊழல், டாஸ்மாக் ஆகியவை மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் தேமுதிக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தேர்தலுக்காகவும் கட்சிக்காகவும் கிடையாது. மக்களுக்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.