கர்நாடக் அரசு சார்பில் தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் புள்ளிவிரங்கள் அடிப்படையில் அடுத்த 10 நாட்களுக்கு காவிரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது செப்டம்பர் 12ஆம் தேதி வரை நாள் தோறும் 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்த உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உரிய நீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இக்கூட்டத்தில்,உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தண்ணீரை திறக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இறுதியில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டும் கடந்த இரண்டு நாட்களாக 4 ஆயிரம் கன அடிக்கும் குறைவாகத்தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் கொடுத்த உத்தரவின்படி அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என்பது தான் உத்தரவு. அதைக்கூட கர்நாடக அரசு பின்பற்றப்படவில்லை என தமிழ்நாடு அரசுத்தரப்பில் கூறப்பட்டது. மேலும் கர்நாடக அணைகளில் உள்ள காவிரி நீரின் அளவு, மழை மற்றும் கால்வாய்களில் உள்ள நீரின் அளவு உள்ளிட்டவை தெளிவாக எடுத்துறைக்கப்பட்டது.
கர்நாடக் அரசு சார்பில் தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் புள்ளிவிரங்கள் அடிப்படையில் அடுத்த 10 நாட்களுக்கு காவிரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். இந்த பரிந்துரையை கர்நாடாக ஏற்காத பட்சத்தில் மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தண்ணீர் திறக்காதது குறித்த கர்நாடக அரசின் மீதான அதிருப்தியை தமிழ்நாடு அரசு தெரிவித்தது. தங்களால் நீர்த்திறக்க முடியாத சூழலில் இருப்பதாக கர்நாடக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.