மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மூன்றாவது சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த மார்ச் 23ல் பண மோசடி வழக்கு தொடர்பாகக் கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் பிற இடங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது.

முன்னதாக மார்ச் மற்றும் பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை சம்மனை இரண்டு முறையும் மொய்த்ரா நிராகரித்தார். எனவே, தற்போது மூன்றாவது முறையாக புதிய சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறல் வழக்கில் விசாரிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஆகியோருக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா நாளை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.