எங்களை பாதுகாத்துக் கொள்ள தெரியும்: இஸ்ரேல்!

இஸ்ரேல் மீது ஈரான் சமீபத்தில் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தை கிளப்பியிருந்தது. ஈரானின் செயலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம், அமைதி காக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகள் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தற்காப்புக்காக இஸ்ரேல் சொந்தமாக முடிவை எடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் 12 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்து ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் ஏப்ரல் 14ம் தேதி தாக்குதலை தொடுத்திருக்கிறது. அன்று இரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 99%-ஐ இஸ்ரேல் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இஸ்ரேல் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியிருக்கிறது.

இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடனடி பதில் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கவில்லை. ஆனால், நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடுக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவும், நேற்று அதிகாலையும் சுமார் 150 ராக்கெட்களை வீசி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதில் 2 கமாண்டர்கள் உட்பட மூன்று ஹில்புல்லா போராளிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம் மத்திய கிழக்கில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விடுத்துள்ள அறிக்கை பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, “ஈரான் விவகாரத்தில் தற்காப்புக்காக இஸ்ரேல் சொந்தமாக முடிவை எடுக்கும். நட்பு நாடுகளின் கருத்துக்கள் முரணாக இருந்தாலும், இஸ்ரேல் சொந்தமாக முடிவெடுக்கும்” என்று கூறியுள்ளார். அதாவது, ஜெர்மன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற இஸ்ரேலின் நட்பு நாடுகள், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க கூடாது, என்று இஸ்ரேலை வலியுறுத்தியிருந்தன. ஆனால், நெதன்யாகு இந்த அறிவுறுத்தலை ஏற்க தயாராக இல்லை என்பது, தற்போது அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

இந்நிலையில் ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் காரணமாக இஸ்லாமிய நாடுகள் ஒரு புள்ளியில் இணைய தொடங்கி உள்ளன. அந்த வகையில்தான் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கி உள்ளது. முக்கியமாக கடந்த சில மாதங்களுக்கு இஸ்ரேல் நடத்திய மருத்துவமனை தாக்குதல் அந்த நாட்டிற்கே எதிராக திரும்பும் என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவி உள்ளனர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 800 பேர் வரை பலியாகினர். இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்று சேர தொடங்கி உள்ளன. சன்னி – ஷியா மோதல் காரணமாக பிரிந்து இருந்த சவுதி – ஈரான் கூட இஸ்ரேலை இந்த விவகாரத்தில் ஒன்றாக கண்டிக்க தொடங்கி உள்ளன. இஸ்ரேல் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்திற்கு ஹெஸ்புல்லா உள்ளிட்ட போராளி குழுக்களை அனுப்பி உதவியது. இதற்கு பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் அப்போது நடந்தது. பாலஸ்தீன போரில் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன போராளி குழுக்களுக்கு உதவிய நிலையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது. ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.

இதையடுத்து தற்போது இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது.இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதில் என ஈரான் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் பால்ஸ்தீன போர் தொடங்கி பல விஷயங்கள் இந்த மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 200 ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலை அடையவில்லை. விரைவில் அவை இஸ்ரேல் மீது சென்று தாக்குதலை ஏற்படுத்தும். சில ஏவுகணைகள் தற்போதைக்கு இஸ்ரேலின் ராணுவ தளவாடங்களை தாக்கி லேசான சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. அந்நாட்டு அதிபர் – பிரதமர் – ராணுவ தளபதி உள்ளிட்டோருக்கான உயர்மட்ட கூட்டத்தில் பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரானுக்கு பயங்கர பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இது என்ன பதிலடி என்று தெரியவில்லை. இந்த பதிலடி மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.

கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – பாலஸ்தீன போர் போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவை முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை. ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன.