பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தலிபான்கள்!

பாகிஸ்தான் ராணுவம் விடியற்காலையில் நடத்திய ராக்கெட் தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் கொல்லப்பட்டதை அடுத்து தலிபான் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இஸ்லாமாபாத் தீவிரவாதக் குழுக்கள் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தாக்குதல்களை நடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும் ஒரு ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரியும், பாகிஸ்தானியப் படைகள் சனிக்கிழமை அதிகாலை ராக்கெட்டுகளை வீசியதாகவும் அதில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

குனாரின் ஷெல்டன் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல்களில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு ஆண் காயமடைந்தார் என்று மாகாண தகவல் இயக்குனர் நஜிபுல்லா ஹசன் அப்தால் கூறினார். மேலும் இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் இராணுவ விமானம் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோன்றே ஒரு தாக்குதல் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் எல்லைக்கு அருகில் நடத்தப்பட்டது என்று மற்றொரு ஆப்கானிஸ்தான் அதிகாரி கூறினார்.

இந்த தாக்குதைல் பொதுமக்கள் வீடுகள் மட்டுமே குறிவைக்கப்பட்டன என குற்றம் சாட்டிய நிலையில்,
பாகிஸ்தானிற்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. “ஆப்கானிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் கடுமையாக கண்டிக்கிறது” என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் செய்தியாளர்களிடம் ஆடியோ செய்தியில் தெரிவித்துள்ளார். ”

‘இராணுவ அத்துமீறல்கள்’ குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கருத்து உடனடியாக தெரிவிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கியும் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரிடம் பாகிஸ்தான் செய்த இராணுவ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானின் முன்னணி தனியார் தொலைக்காட்சியான TOLO News தாக்குதலில் வீடுகள் அழிக்கப்பட்ட காட்சிகளைக் காட்டியது. தாக்குதலில் கொல்லப்பட்ட மக்கள் அனைவரும் தாலிபான்கள் மற்றும் அரசாங்கத்துடன் எந்த தொடர்பும் இல்லாத அப்பாவி பொதுமக்கள் ஆவர்கள்.