வியாழக்கிழமை டிசம்பர், 18, 2014 - Thursday, December 18, 2014

Movie Review  

Snehavin Kadhalargal - Tamil Movie Review
வெறும் அறுபது லட்சத்தை வைத்துக் கொண்டு லட்சியப் கதையை தர முயற்சித்திருக்கிறார் முத்துராமலிங்கன். முதல் முயற்சி. வரவேற்போம்!...
மேலும் (more)  
Aintham Thalaimurai Siddha Vaidhiya Sigamani - Tamil Movie Review
கோர்வையான திரைக்கதை மூலம் நடத்திச் சென்றிருந்தால், சபாஷ்மணி ஆகியிருப்பான், சிகாமணி....
மேலும் (more)  
Thirumanam Ennum Nikkah - Tamil Movie Review
ரயில் பயணத்தின்போது ஏற்படும் காதல் கதை....
மேலும் (more)  
Oru Kal Oru Kannadi - Tamil Movie Review
ஒரு காமெடி கண்ணாடி பெட்டிக்குள் குலுங்கும் வைரக்கல்.........
மேலும் (more)  

 குறிப்பறிதல்

திருக்குறள் - Thirukkural

  
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர வையக்கு அணி.
- (குறள் : 701)

ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.


வரலாற்றில் இன்று

Today in History  

டிசம்பர்
18
 • சிறுபான்மையினர் உரிமை நாள்.
 • 1271 - குப்லாய் கான் தனது சீனப் பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டான். யுவான் வம்சம் ஆரம்பமானது.
 • 1642 - ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார்.
 • 1787 - நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.
 • 1865 - அமெரிக்க அரசியல் சட்டத்தில் 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி அமெரிக்காவில் கொத்தடிமை முறை அடியோடு அழிக்கப்பட்டது.
 • 1911 - சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
 • 1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
 • 1935 - இலங்கை சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
 • 1941 - ஹொங்கொங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து ஜப்பான் ஹொங்கொங் மீது படையெடுத்தது.
 • 1961 - இந்தோனீசியா டச்சு நியூ கினியை ஆக்கிரமித்தது.
 • 1966 - சனி கோளின் சந்திரன் எப்பிமேத்தியஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
 • 1973 - சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
 • 1979 - கலிபோர்னியாவில் ஸ்டான்லி பாரெட் என்பவர் Sound Barrier எனப்படும் ஒலியை விஞ்சும் வேகத்தில் மணிக்கு 1190 கிலோ மீட்டல் வேகத்தில் தனது ராக்கெட் காரை ஓட்டி சாதனை செய்தார்.
 • 1987 - லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
 • 1997 - எச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்டது
 • 1999 - ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.
Site Meter