அமெரிக்காவிற்கு அச்சுறுத்துலாக சீனா மாறி உள்ளது: நிக்கி ஹாலே

அமெரிக்காவிற்கு அச்சுறுத்துலாக சீனா மாறி உள்ளதாகவும், அந்நாடு போருக்கு தயாராகி வருவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

அமெரிக்காவின் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் உள்ள நிக்கி ஹாலே கூறியதாவது:-

கடந்த அரை நூற்றாண்டாக அமெரிக்காவை தோற்கடிக்க, சீனா சதி செய்து வருகிறது. அந்நாட்டை எதிர்கொள்ள வலிமை முக்கியம். நமது வர்த்தக ரகசியங்களை சீனா எடுத்து கொண்டுள்ளது. மிகவும் பின் தங்கிய நாடாக இருந்த சீனா தற்போது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா மாறி உள்ளது.

அமெரிக்காவை அச்சுறுத்தவும், ஆசியாவை தாண்டி ஆதிக்கம் செலுத்தும் வகையில் ராணுவத்தை சீனா கட்டமைத்து வருகிறது. அமெரிக்க ராணுவத்திற்கு இணையாக தனது ராணுவத்தை அந்நாடு மேம்படுத்தி உள்ளது. சீனா போருக்கு தயாராகி வருகிறது. வெற்றியை அந்நாட்டு தலைவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வாறு நிக்கி ஹாலே கூறினார்.