பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்!

பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பீலா எம்.திரிவேதி, ஜேபி. பர்டிவாலா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது. இதில் தினேஷ் மகேஸ்வரி, பெலா எம்.திரிவேதி, ஜேபி. பர்டிவாலா ஆகிய மூன்று பேரும் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகிய இருவர் இந்த பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி. பார்திவாலா, பேலா திரிவேதி ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது.

அதன்படி, 5 நீதிபதிகளில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீடு சரி என்றும் 2 பேர் தவறு எனவும் தீர்ப்பு அளித்துள்ளனர். தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகிய இருவர் பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். மற்ற 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர். 3:2 என்ற அடிப்படையில், பெரும்பான்மை நீதிபதிகள் இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் உறுதியாகியுள்ளது.

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவெடுத்த மத்திய அரசு, இட ஒதுக்கீட்டை வழங்க வழிசெய்யும் வகையில், இது தொடர்பான 103ஆவது சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டு வந்து அதற்கான மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவியிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா சட்டமாகியது. அப்போதே இந்த சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினர் என்பதற்கான அளவுகோல் குறித்து சர்ச்சை எழுந்தது. ஆனாலும், எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய அரசு இந்த இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றத்திலும் அச்சட்டம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.