தமிழகத்தில் மார்ச் 13ல் பிளஸ் 2 , ஏப்.6ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு!

10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதியும் நடைபெறும் எனவும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இந்நிலையில்,10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.