கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு வெளியே வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டு கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஊதியமும் முறையாக வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போராட்டத்தை அடுத்து தொழிற்சாலைக்கு விரைந்து வந்த கலவரத் தடுப்பு போலீசார் கிளிர்ச்சியை ஒடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸ் தாக்குதலில் ஏராளமான தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சீனாவில் ஜென்ஜவ் நகரில் உள்ள ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் 2 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தொழிலாளர்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளதால் ஜென்ஜவ் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 14 மாடல் உற்பத்தி முடங்கியது.