மூத்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பனின் 98ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லிக்கு கிளம்புவதற்கு முன்பாக ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
திராவிட இயக்க மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர் கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் தனது 98வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். ஆர்.எம்.வீ., பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் (X) பக்கத்தில், “எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மதிப்பும், அன்பும் கொண்டவருமான அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்! நம் பாசத்திற்குரிய ஆர்.எம்.வீ. அவர்கள் நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
