இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் ஒரு பகுதியில் இன்று சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்திலும், ஆச்சே மாகாணத்தின் கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. சுனாமி ஆபத்து இல்லை என்றாலும் நிலநடுக்கத்தால் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என இந்தோனேசிய வானியல் மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.