சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா?: வீரலட்சுமி

கணவர் கணேசனுடன் பாக்ஸிங்கிற்கு வரும்படி சீமானுக்கு வீரலட்சுமி சவால் விட்டுள்ளார். மேலும், பாக்ஸிங் போடுவதற்கான இடத்தையும், நேரத்தையும் அறிவித்து வீடியோ ஒன்றையும் வீரலட்சுமி வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். வீரலட்சுமிக்கு எதிராக சீமான் பல முறை கருத்துகளை முன்வைத்தார். இது இருவரிடையே கருத்து மோதலை ஏற்படுத்தியது. அவ்வப்போது வீரலட்சுமியும் வீடியோக்களை வெளியிட்டு சீமானுக்கு எதிராக பேசி வருகிறார். இந்நிலையில், கணவர் கணேசனுடன் பாக்ஸிங்கிற்கு வரும்படி சீமானுக்கு வீரலட்சுமி சவால் விட்டுள்ளார். மேலும், பாக்ஸிங் போடுவதற்கான இடத்தையும், நேரத்தையும் அறிவித்து வீடியோ ஒன்றையும் வீரலட்சுமி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களே.. ஊடகவியாளர் மத்தியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் என்னை பெண் என்றும் பாராமல் ஒழிங்கினமாக பேசி வருகிறீர்கள். நீங்கள் பேசும் பேச்சுகளை பொது வாழ்வில் உள்ள ஒரு பெண்ணாக நான் பொறுத்துக் கொண்டு கடந்து செல்வேன். ஆனால், உங்களது இழிவான பேச்சுகளை கேட்டுக் கொண்டு அமைதியாக செல்ல எனது கணவருக்கு எந்த அவசியமும் இல்லை. எனது கணவர் உங்களை செல்போனில் தொடர்புக் கொண்டபோது அழைப்பை துண்டித்து விட்டீர்கள். மறுபடியும் தொடர்புக் கொண்டபோது சீமானிடம் தனக்கு உங்களுடன் பாக்ஸிங் செய்ய ஆசையாக இருக்கிறது. உங்களால் என் எதிரில் நிற்க முடியுமா என்று கேட்டார். ஆனால் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.

சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா? ஆனால், ஊடகவியளரிடம் தைரியம் இருந்தால் நேரில் வந்து நிற்க சொல்லுங்கள் என்று எனது கணவரை கூறியிருக்கிறீர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை சுமார் ஒரு மணி நேரம் கேள்வி கேட்டு பேசியவர் எனது கணவர். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் இப்போது நின்றுக் கொண்டிருக்கும் இடம் திருவள்ளுவர் மாவட்டத்தில், திருவள்ளூர் வட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மைதானம் இது. இங்குதான் பாக்சிங் செய்வதற்கு இடம் ஏற்பாடு செய்துள்ளேன். 2024ம் ஆண்டு தை மாதத்தில் வரும் காணும் பொங்கல் அன்று எனது கணவருக்கும், உங்களுக்கும் சண்டை நடக்க போகிறது. இந்த சண்டையில் பாக்ஸிங், கராத்தே, குங்பூ, மல்யுத்தம் என இதில் எது வேண்டுமென்றாலும் செய்யலாம். அனைத்தையும் சமாளிக்க எனது கணவர் தயாராக இருக்கிறார். இதில் தோற்பவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். என்ன பந்தயம் என்பது குறித்து போட்டியின் மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.